உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

240 ஏக்கர் பரப்பளவில் ரம்மியமாகக் காட்சியளிக்கும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்..!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வலசை வரத் தொடங்கியுள்ளன. உள்நாட்டுப் பறவைகளுடன் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து கூழைக்கிடா, வண்ணநாரை, நெடுங்கால் உள்ளான், வால் காக்கை, காஸ்பியன் ஆலா, கருங்கழுத்து நாரை போன்ற பறவைகள் வந்துள்ளன. இனப்பெருக்கத்துக்காக வந்துள்ள பறவைகளைப் பாதுகாக்கும் வகையில், பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 20-ஆவது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாட உள்ளனர்.