Nakkheeran
”இந்த துயரச்சம்பவத்திற்கு தவெக அரசே பொறுப்பு”; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்
அக்டோபர் 29ஆம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்களின் விசைப்படகு, முரசு புயலின்போது பலத்த காற்றில் சிக்கிக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில், முரசு புயலில் சிக்கி சென்னை, காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், புயலில் சிக்கி உயிர் இழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஆளும் தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலே இந்த துயரச்சம்பவம் அரங்கேறியுள்ளது. புயல் வரும் சமயத்தில் மீனவர்களைக் கடலுக்…