Indian Express Tamil
துபாயில் இருந்து தங்கம் கொண்டு வரப் போறீங்களா? ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்வளவு அனுமதி தெரியுமா? புதிய சுங்கத் துறை விதிகள்
துபாயில் தங்கம் விலை இந்தியாவை விடக் குறைவு என்பதால், நம்ம ஊர்ல இருக்கிற பல பேருக்கு துபாயில் இருந்து தங்கம் வாங்கி வரணும்னுதான் ஆசை. கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 5, 2026) நிலவரப்படி, துபாயில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் சுமார் 12,532 ரூபாய்க்கும், 22 கேரட் தங்கம் சுமார் 11,607 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஆனா, டெல்லியிலயோ 24 கேரட் தங்கம் 14,617 ரூபாயும், 22 கேரட் தங்கம் 13,400 ரூபாயும் விக்குது. இந்த விலை வித்தியாசத்தாலதான் பலரும் துபாயிலிருந்து தங்கம் வாங்கத் துடிக்கிறாங்க. ஆனா, இந்த பண்டிகைக் காலத்துல துபாயிலிருந்து தங்கம் கொண்டு வரவோ அல்லது அங்கே இருக்கிற சொந்தக்காரங்க கிட்ட வாங்கித் தரச் சொ…