Daily Thanthi
தீபாவளி பண்டிகை: பைக் ரேஸ், சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை - சென்னை காவல்துறை எச்சரிக்கை
சென்னை, தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையின்போது இளைஞர்கள் பைக் ரேஸ், சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. பைக் சாகசங்கள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில், பண்டிகை காலகட்டத்தில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசங்கள், பைக் ரேஸ் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான முறையில் பைக் ஓட்டுவதால்…