Maalaimalar
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் புதிய யானை ஆன்மீக பணியை தொடங்கியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புதிய யானை நமச்சிவாயம் ஆன்மீக பணியை தொடங்கி, பிரதோஷ விழாவில் பக்தர்களுடன் வலம் வந்து அனைவரையும் கவர்ந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த யானை ருக்கு இறந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 8 வயதான ஆண் யானை கொண்டு வரப்பட்டது. இதற்கு நமச்சிவாயம் என பெயரிடப்பட்டது. வலம் இந்த யானைக்கு பாகன்கள் பயிற்சி அளித்து…