Nakkheeran
“தமிழ்நாடு முழுவதும் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது” - அமைச்சர் ராஜ் மோகன் பரபரப்பு பேட்டி!
கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தின் நூல் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டியில், “உலகத்திலேயே மனிதன் மட்டும்தான் வெட்கப்படத் தெரிந்த மிருகம். ஆனால், பெரியார் பெயரில் இவ்வளவு பெரிய அநியாயத்தைச் செய்துவிட்டு, வெட்கமே இல்லாமல் எங்களைப் பற்றி அவதூறு பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மை இதோ இருக்கிறது. பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி இந்தப் புத்தகங்கள் அனைத்தும், அதாவது ஆட்சேபனைக்குரிய புத்தகங்கள் அனைத்தும், ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என ஆர்டர் செ…