உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

குரூப் 4 தமிழ்ல 90-க்கு 88 மார்க் வாங்கணுமா? இந்த 7 அவுட் சோர்ஸ் புத்தகங்கள் கட்டாயம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் நடந்து முடிந்து ஒரு வாரத்தைக் கடந்துள்ள நிலையில், தேர்வெழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகள் குறித்த பதற்றத்திலும், அடுத்து வரவுள்ள குரூப் 4 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அதற்கான வழிகாட்டுதல்களைத் தேடியும் வருகின்றனர். இந்நிலையில், தேர்வு எழுதிய பலரும் சமூக வலைதளங்களிலும், பல்வேறு யூடியூப் சேனல்களிலும் வெளியிடப்படும் உத்தேச விடைக் குறிப்புகளைப் (Answer Keys) பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பல சேனல்களில் பல கேள்விகளுக்குத் தவறான விடைகள் பகிரப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. உதாரணமாக, தொல்காப்பிய மரபியலில் இடம்பெறும் 'குரங்கு' தொடர்பான…