Nakkheeran
“இது ஊழல் இல்லையா?; மக்களை ஏமாற்றும் பச்சைப்பொய் இல்லையா?” - கேள்விகளை அடுக்கிய இ.பி.எஸ்.!
கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தின் நூல் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவுப் பசியைப் போக்கவும் பயன்பட வேண்டிய நூலகங்களில் கூட கோ…