Nakkheeran
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!
தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியான தல்ல எனத் தெரிவித்தும், நீர்ப்பகிர்வை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ அல்லது நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு சற்று மேலே, 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது நீர்த்தேக்கத்தைக் கட்ட கர்…