Polimer News
அமெரிக்க உயிரியல் பூங்காவில் இரு சீன பாண்டாக்களை பொது மக்கள் பார்வையிட அனுமதி..!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா உயிரியல் பூங்காவில் ((Zoo Atlanta)), சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பிங் பிங் ((Ping Ping)) மற்றும் ஃபு சுவாங்((Fu Shuang)) ஆகிய இரண்டு புதிய பாண்டாக்கள் பொதுமக்களின் பார்வைக்காக அறிமுகப்படுத்தப்பட்டன. பாண்டாக்கள் இரண்டும் சீனாவின் செங்டு ஆராய்ச்சி மையத்திலிருந்து கடந்த செப்டம்பர் 27 அன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் அட்லாண்டா கொண்டுவரப்பட்டன. பூங்காவிற்கு வந்த பிறகு 5 வாரங்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இவை இரண்டும் வைக்கப்பட்டிருந்தன.