Indian Express Tamil
பெரியார் அறிவுலக ஊழல்; 'கொள்முதல் ஆர்டர்களை வழங்கிய அதிகாரிகள் யார்?' லஞ்ச ஒழிப்புத் துறையில் தி.மு.க புகார்
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட நூலகத்துக்கு முன்னாள் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் அறிவுலகம் என்று பெயர் சூட்டினார். அப்போது பணிகள் நிறைவு பெறாததால் நூலகம் திறக்கப்படவில்லை. இதனையடுத்து பணிகள் முடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் இந்த அறிவுலகத்தை கடந்த 16 ஆம் தேதி திறந்து வைத்தார். புத்தகம் வாங்குவதில் ஊழல் இந்நிலையில், பெரியார் அறிவுலக நூலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்வதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிப்படுத்தி இருந்தார். நூலகங்களுக்கு நூல் தேர…