உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

Fridge Compressor வெடித்து பயங்கரம்.. சுவர் இடிந்து விழுந்ததில் 10 வயது சிறுவன் பலி..!

அரகண்டநல்லூர் அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் Fridge-இன் compressor வெடித்து 10 வயது சிறுவன் உயிரிழந்தார். தாயார் சரண்யா தனது செல்போனை சார்ஜ் போட்டிருந்தபோது மின்கசிவு காரணமாக Adapter wire தீப்பற்றி, அருகே வைக்கப்பட்டிருந்த தீபாவளி மத்தாப்புகள் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. தீ பரவி Fridge-இன் compressor வெடித்ததால், வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பத்ரிநாத் உடல் நசுங்கி இறந்ததாக கூறப்படுகிறது. தாயார் சரண்யாவும், தந்தை மூர்த்தியும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.