உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“இந்த முறையும் அது தொடரும்” - பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!

தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஒட்டுமொத்த தேசமும் ஒளியால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒளித் திருநாள், இருளுக்கு எதிரான நமது உறுதியை வெளிப்படுத்துகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்தத் திருநாளும், உங்களுடைய எதிர்வரும் காலமும் நலம், அமைதி மற்றும் செழிப்புடன் நிறைந்திருக்கட்டும். உங்களைப் போலவே நானும் மிகுந்…