Polimer News
தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து.. பைக்கில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..!
தீபாவளியை கொண்டாட சென்னையிலிருந்து வேலூருக்கு Duke பைக்கில் அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். மழையை பொருட்படுத்தாமல், சுங்குவார்சத்திரம் மேம்பாலத்தில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்ட பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் அரவிந்த் தடுப்புசுவரில் தலை மோதி இறந்ததாக கூறப்படுகிறது.