Hindu Tamil Thisai
“திருப்பரங்குன்றத்தில் அரசு தீபம் ஏற்ற வேண்டும்” - நயினார் நாகேந்திரன்
நெல்லை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கார்த்திகை தீபத்திருநாளில் திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறியது: “கோவை பெரியார் நூலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக, குழுவில் இடம்பெற்றவரே தெரிவித்துள்ள நிலையில், இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும்…