Indian Express Tamil
பட்டாசு வெடிக்கும்போது கவனம் தேவை: 20 படுக்கைகளுடன் தயார் நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை
தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு தான். பட்டாசு வெடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள் எனும் அளவிற்கு பட்டாசு குழந்தைகளுடன் ஒன்றிப்போய்விட்டது. இன்னும் சில பேர் பெரியவர்களாக மாறிய பிறகும் கூட பட்டாசு வெடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பட்டாசை வெடிக்கும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். குறிப்பாக, பட்டாசுகளை சமையலறை அடுப்புகள் அல்லது எரிவாயு சிலிண்டர்களுக்கு அருகில் ஒருபோதும் சேமித்து வைக்கக்கூடாது. அதேபோல், பட்டாசுகளை வெடிக்கும்போது ஓடுவதையும் விளையாடுவதையும் தவிர்க்க வ…