Indian Express Tamil
புதுச்சேரி தற்காலிக பணியாளர்களுக்கு ரூ.1000 கருணைத் தொகை: ஆளுநர் ஒப்புதல்
புதுச்சேரி அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களுக்கு தீபாவளி மற்றும் வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1000-ம் கருணைத் தொகையாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஒப்புதல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் கேபினெட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதலுடன் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன்படி பள்ளி கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஆகிய துறைகளில் பணியாற்றும் மொத்தம் ஆயிரத்து 447 தற்காலிகப் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.…