உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'ஆதிதிராவிட மகாஜன சங்க சொத்தை மீட்க நடவடிக்கை'-நந்தனார் கல்விக் கழகத் தலைவர் பேட்டி

சிதம்பரம் நகரில் ஆதிதிராவிட மகாஜன சங்கத்துக்குச் சொந்தமான இடத்தை வி.சி.க எம்எல்ஏ விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், அந்த இடத்தை மீட்க நந்தனார் கல்விக்கழகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அதன் தலைவர் கே.ஐ. மணிரத்னம் தெரிவித்தார். சிதம்பரம் நந்தனார் மடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'சிதம்பரம் நகரின் முக்கியப் பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட மகாஜன சங்கத்திற்காக 1,800 சதுர அடி இடம் வாங்கப்பட்டது. கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு ஏழை மக்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என சிறு தொகைகளைச் சேகரித்து வழங்கிய பணத்தி…