Indian Express Tamil
ஆதரவற்ற நாய்களின் பசி போக்க கரம் கோர்க்கும் திரிஷா: வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
சினிமா உலகில் தனது தனித்துவமான நடிப்பால் பலரின் மனதை வென்ற நடிகை திரிஷா, சமூக வலைதளங்களில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் அவர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் கவனம் பெற்ற நிலையில், தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் பகிர்ந்துள்ள பதிவும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. நீண்ட காலமாகவே விலங்குகள் நல அமைப்பான 'ப்ளு கிராஸ் ஆப் இந்தியா' நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு சமூக நலப் பணிகளில் திரிஷா ஈடுப்பட்டு வருகிறார். வழக்கமான பட்டாசு மற்றும் கொண்டாட்டங்களை தாண்டி, ஆதரவற்ற விலங்க…