Nakkheeran
மக்களை முன்னேற்றத் திட்டம் தீட்டாமல் திரையரங்குகளில் தினமும் 6 காட்சிகளா?-அன்புமணி கண்டனம்
'தமிழ்நாட்டில் புதிதாக வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு, வெளியீட்டு நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு தினமும் 6 காட்சிகளை திரையிடுவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களின் உழைப்பையும், உற்பத்தித் திறனையும் ஊக்குவித்து முன்னேற்றத்திற்கு வழி வகுப்பதற்கு பதிலாக ஒரு நாளைக்கு 20.30 மணி நேரம் திரையரங்குகளில் முடக்கி வைப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது' என பாமக அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக வரலாற்றில் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் திரைப்படங்களுக்கு திரையிட இதுவரை சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கபட்டதில்லை. இப்போதும் கூட அதற்கான தேவை எதுவும் இல்ல…