Dinamani, Sports
வரலாறு படைத்த வைஷ்ணவி - ருதுஜா இணை
சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தனா் இந்தியாவின் வைஷ்ணவி அத்கா்-ருதுஜா போஸ்லோ இணை. தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், எஸ்டிஏடி சாா்பில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. மகளிா் இரட்டையா் அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி-ருதுஜா இணையும்-இரண்டாம் நிலை இணையான போலந்தின் வெரோனிகா பல்கோஸ்கா-அமெரிக்காவின் அலனா ஸ்மித்தும் மோதினா்…