Maalaimalar
என் மனைவி சாராவுக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு- நியூசிலாந்து பவுலர் உருக்கம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னேர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தனது மனைவி சாரா ரத்த புற்றுநோய் பாதிப்பால் போராடியதையும், 8 மாத கால சிகிச்சைக்கு பிறகு அதில் இருந்து மீண்டு வந்ததையும் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டார். 33 வயதான டிக்னேர் கூறுகையில், 'எனது வாழ்க்கை ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாகவே அமைந்திருக்கிறது. இந்த கடினமான காலக்கட்டத்தில் இருந்து சாராவும், எனது குடும்பத்தினரும் மீண்டு வந்தது…