Polimer News
இன்று தீபாவளி - நாடு முழுவதும் களைகட்டும் கொண்டாட்டங்கள்..
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் இன்று தீபாவளித் திருநாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளைப் பகிர்ந்தும், தெருக்களில் ஒன்றாக பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மாதத்தின் முதல் வாரத்திலேயே தீபாவளிப் பண்டிகை வந்துள்ளதன் காரணமாக போனஸ், சம்பளம் என மக்கள் கைகளில் ஓரளவு பணப் புழக்கம் உள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி நிலவுகிறது. குடும்பத்தோடு தீபாவளியைக் கொண்டாட பெருநகரங்களில் இருந்து கிராமங்களுக்குப் பல்வேறு சிரமங்களுக்…