Indian Express Tamil
'போர்ட் மீட்டிங் வீடியோ, ஆடியோ பதிவுகளை கொடுங்க': நோயல் டாடா அதிரடி கடிதம்; சந்திரசேகரன், வேணு சீனிவாசனுக்கு புதிய நெருக்கடி
எழுதியவர்: ஜார்ஜ் மேத்யூ டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகளுக்கு மறுநியமனம் செய்யப்பட்ட நடைமுறைக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவித்துள்ள டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா, இது தொடர்பான முக்கிய இயக்குநர் குழு கூட்டத்தின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளைக் கோரியுள்ளார். கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்திடம் மறுநியமனத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டதையும், இயக்குநர் வேணு சீனிவாசனின் பங்கையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் சந்திரசேகரனின் நெருங்கிய குடும்பத்தினருடன் தொடர்புடைய நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான வணிக ரீதியான பரிவ…