Hindu Tamil Thisai
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் ரூ.1.98 கோடியில் பார்வையாளர் வசதிகள் மேம்பாடு
காஞ்சிபுரம்: பாரம்பரியத்தைத் தத்தெடு திட்டத்தில் தமிழகத்தில் முதல் கோயிலாக காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தக் கோயிலில் ரூ.1.98 கோடியிலான பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நேற்று முன்தினம் இரவு தொடங்கி வைக்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் ‘பாரம்பரியத்தைத் தத்தெடு 2.0’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் கோயிலாக கைலாசநாதர் கோயில் தேர்வு செய்யப்பட்டது…