Indian Express Tamil
குப்பைக்குப் போகும் வாழைப்பழத் தோல்... இனி வீட்டைச் சுத்தம் செய்யவும் பயன்படும்; எப்படி தெரியுமா?
நாம் தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தின் தோலைப் பெரும்பாலும் குப்பையில்தான் வீசுகிறோம். ஆனால், இந்த வாழைப்பழத் தோலுடன் சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் பேக்கிங் சோடாவைக் கலந்து பயன்படுத்தினால் வீட்டைச் சுத்தம் செய்ய உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த எளிய வீட்டு வைத்தியம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, ரசாயனங்கள் நிறைந்த சுத்தம் செய்யும் பொருட்களைத் தவிர்த்து, வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்ய விரும்புபவர்களுக்கு இந்தக் கலவை ஒரு மாற்று வழியாகப் பரிந்துரைக்கப்படுகிறது. வாழைப்பழத் தோலில் உள்ள இயற்கையான ஈரப்பதமும், ப…