Indian Express Tamil
தீபாவளி வாழ்த்துகள் 2026: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர 30 சூப்பரான வாழ்த்துச் செய்திகள் இதோ
இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, மகிழ்ச்சி, ஒற்றுமை, அன்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறது. இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் இந்தத் திருநாள், தீமையை அழித்து நன்மை வெற்றி பெறுவதைக் கொண்டாடும் நாளாகவும் கருதப்படுகிறது. புத்தாடைகள் அணிவது, அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் தயாரிப்பது, பட்டாசுகள் வெடிப்பது என ஒவ்வொரு குடும்பத்திலும் தீபாவளிக் கொண்டாட்டம் களைகட்டும். குறிப்பாக, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் நாளாக தீபாவளி அமைந்துள்ளது. தீபாவளி என்றாலே ந…