Nakkheeran
’முத்தங்களுடன் தீபாவளி வாழ்த்து’; ரசிகர்களுடன் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உட்பட பல்வேறு பிரபலங்கள் மக்களுக்குத் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தீபாவளியை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்தின் முன்பு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கூடினர். தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் தூறலையும் பொருட்படுத்தாமல் ரஜினிகாந்த்தை நேரில் பார்க்க ரசிகர்கள், அவரது வீட்டின் முன்பு வாழ்த்து கோஷங்களுடன் குவிந்திருந்தனர். ஆராவாரத்தோடு திரண்டிருந்த ரசிகர்களுக்கு, கையெடுத்துக் கும்பிட்டபடியும், பறக்கும் முத்தங்க…