IBC Tamil
திருகோணமலை துப்பாக்கிச் சூடு: மூவர் கைது:பிரதான துப்பாக்கிதாரி இராணுவத்தில் பணியாற்றியதாக தகவல்
திருகோணமலை, உப்புவெளி - கப்பல்துறை பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 02ஆம் திகதி இரவு கப்பல்துறை சந்தியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாடகை முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த இருவர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார். இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்...