Indian Express Tamil
வாஷிங் மெஷினில் துண்டு துவைக்கும்போது இதை மறக்காதீங்க... மாதம் ஒருமுறை செய்தால் போதும்
குளிப்பதற்கும், முகம் மற்றும் கைகளைத் துடைப்பதற்கும் நாம் தினமும் பயன்படுத்தும் துண்டுகளைச் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். பொதுவாக துண்டுகளைத் துவைக்கும்போது சலவைத் தூள் அல்லது திரவ சோப்புகளைப் பயன்படுத்துவது வழக்கம். இருப்பினும், எத்தனை முறை துவைத்தாலும் சில துண்டுகள் நாளடைவில் கடினமாகவும் சொரசொரப்பாகவும் மாறிவிடும். குறிப்பாக, தண்ணீரை உறிஞ்சும் தன்மையும் குறைந்துவிடும். சில நேரங்களில் துவைத்த பிறகும் ஒருவித ஈரமான வாடை அல்லது பூஞ்சை நாற்றம் வீசும். இதற்குக் காரணம் துண்டுகளில் படிந்திருக்கும் சோப்புக் கறைகள், துணி மென்மையாக்கிகள், உடலில் இருந்து வெளியேறும் எண்ணெய்ப் பசை மற்றும் தண்ணீ…