Nakkheeran
”கமல்ஹாசன் தமிழகத்தை விட்டே வெளியேற வேண்டி இருக்கும்” - கிருஷ்ணசாமி எச்சரிக்கை!
நடிகரும், அரசியல் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாளை (07-11-26) முன்னிட்டு அவரது புதிய படத்தின் அப்டேட் வெளியானது. அதன்படி, புதிய படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்திற்குச் சண்டியர் எனப் பெயரிடப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டு, கமல்ஹாசன் தனது படத்திற்குச் சண்டியர் எனப் பெயர் வைத்திருந்தார். இதற்கு, தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, படத்திற்கு இந்த பெயர் சூட்டுவதால் தென்மாவட்டங்களில் உள்ள இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படி, அந்த படத்திற்கு…