Nakkheeran
”எனது குடும்ப உறுப்பினர்களுக்கு மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்” - பிரதமர் நரேந்திர மோடி
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தீபாவளிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்! நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் ராணுவ வீரர்க…