Nakkheeran
”ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது”; காங்கிரஸ் உறுதி
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக டெல்லி உட்பட நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், நவம்பர் 1 அன்று டெல்லியில் ’இந்தியா’ கூட்டணி சார்பில் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். இவ்வாறாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த போராட்டம…