Nakkheeran
'தீர்க்க முடியாத நோயை தீர்த்து கட்டியுள்ளோம்'-எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர்
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் எல்லையில் இருக்கும் பாதுகாப்புப் படையினரை நேரில் சந்தித்து தீபாவளி கொண்டாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், இந்த ஆண்டும் சத்தீஸ்கர் மாநிலத்தின் நக்ஸல் பாதிப்பு அதிகம் நிறைந்த பஸ்தர் மாவட்ட எல்லையில் உள்ள பாதுகாப்புப் படை முகாமிற்குப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அங்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''முன்பு ஒவ்வொரு ஆண்டும் நக்ஸலைட்டுகள் கொல்லப்படுவதை விட, நமது வீர நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்யும் எண்ணிக்கைதான…