Maalaimalar
சென்னையில் விட்டுவிட்டு மழை: வீட்டுக்குள் முடங்கிய மக்கள்- வெறிச்சோடிய மெரினா மற்றும் பூங்காக்கள்
தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை மக்கள் விமர்சையாக கொண்டாடுவார்கள். சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. விட்டுவிட்டு பெய்யும் கனமழை கனமழை பெய்து சிறிது நேரம் தூறல் கூட இல்லாமல் மழை நின்று விடும். பின்னர் சிறிது நேரம் கழித்து கன மழை பெய்யும். இவ்வாறு நேற்றிரவு…