Indian Express Tamil
ரூ.200 கோடிக்கு மேல் கட்டடப் பணிகள்; உள்கட்டமைப்பு - கட்டுமானக் கழகம் உருவாக்கம்: தமிழக அரசு ஆணை
தமிழ்நாட்டில் ரூ.200 கோடி மதிப்பிற்கு மேற்பட்ட அரசு கட்டடப் பணிகளை மேற்கொள்வது, பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கும் வகையில் கட்டடங்களை உருவாக்குவது மற்றும் தேசிய, சர்வதேச அளவில் முன்னணி தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான கட்டடக் கட்டுமான ஒப்பந்தங்களில் பங்கேற்பது போன்ற பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் "தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம்" அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரால் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், முன்னணி தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும் வகை…