Indian Express Tamil
காங்கிரஸ் நன்கொடை 75% சரிவு: 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த அடி
2025-26-ஆம் நிதியாண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள நன்கொடைத் தொகை முந்தைய ஆண்டை விட சுமார் 75 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளது. இதனால் அக்கட்சியின் மொத்த நன்கொடை ரூ.130.69 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடைகளில் பதிவான மிகக் கடுமையான வீழ்ச்சியாக இது கருதப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சி ரூ.20,000-க்கு மேலான நன்கொடைகளாக ரூ.517.39 கோடியைப் பெற்றிருந்தது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே இந்நிதி ரூ.130.69 கோடியாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்னதாக 2015-16 நிதியாண்டில்தான் இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான சரிவு நிகழ்ந்தது. அப்போது அதற்கு முந்தை…