Daily Thanthi
ஆம்பூரில் 8 வயது சிறுமி மாயம் - ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ரெட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உடனடியாக சிறுமியின் குடும்பத்தினர் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது…