'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - திருச்சீரலைவாய் தல புராணம் முதல் கந்த சஷ்டி விரதம் வரை !
திருச்செந்தூர்... உலகெங்கும் வாழும் முருகபக்தர்களின் மனம் கவர்ந்த தலம். வாழ்வில் ஒருமுறையேனும் அந்த அழகனை திருச்செந்தூர் வந்து தரிசித்துவிடமாட்டோமா என்று ஏங்கும் நெஞ்சங்கள் கோடானகோடி. அதுவும் கந்த சஷ்டி என்றால் சொல்லவே வேண்டாம். ஒருமுறை சூரசம்ஹாரத்தைத் திருச்செந்தூரில் தரிசனம் செய்தவர்களுக்கு ஒவ்வொரு சூரசம்ஹார நாளிலும் திருச்செந்தூரின் நினைவுகள் அலைமோதியபடியே இருக்கும். ஒருபுறம் கடலில் அலைகள் ஆவலுடன் கரைக்கு வந்துவந்து கந்தக் கடவுள்…