Nakkheeran
’தீபாவளி முடிந்தும் களைக்கட்டும் விற்பனை’; நள்ளிரவு முதலே கடைகளில் குவியும் மக்கள்!
தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். நேற்றைய தீபாவளியை முன்னிட்டு கடந்த சில வாரங்களாகவே தீபாவளி விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக, ஜவுளிக் கடைகள், இனிப்பு கடைகள், நகைக் கடைகள் மற்றும் கால் நடை சந்தைகள் என அனைத்து தரப்பிலும் விற்பனை களை கட்டியது. எனினும், தீபாவளிக்கும் முந்தைய சில தினங்களில் கன மழை பெய்ததால் தீபாவளி நெருக்கத்தின் போதான விறுவிறு விற்பனை மந்தமானது. இது வியாபாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்தும் விற்பனை களைகட்டி வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி முடிந்த மறுநாளான இன்று (09-11…