Polimer News
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கிய தமிழ்நாடு அரசு..!
தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் பிரம்மாண்ட கட்டுமானப் பணிகளைத் தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக, ‘தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம்’ என்ற பெயரில் புதிய பொதுத்துறை நிறுவனம் ஒன்றை உருவாக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம்,அரசுப் பணிகளை மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் கட்டுமானத்திற்காக கோரப்படும் ஒப்பந்தங்களில் நேரடியாகப் பங்கேற்றல் ஆகியவற்றுக்காக ஒரு கோடி ரூபாய் தொகுப்பு நிதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத அரசு நிலங்களில் வருவாய் உருவாக்கிடும் வகையில் கட்டடங்களை உருவாக்குதல் போன்ற பணிகளையும் இந்நிற…