Nakkheeran
'திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா'; பூஜையுடன் யாகசாலை தொடக்கம்!
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (10-11-26) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. 5 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானைய…