Indian Express Tamil
சென்னை, திருப்பதி, கோவைக்கு நேரடி பேருந்துகள்; சங்ககிரி புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் பார்த்திபன்
லட்சக்கணக்கான மக்களின் 17 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, பயன்பாட்டிற்கு வராமல் இருந்த சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திறந்து வைத்துள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், சேலம் சங்ககிரி சட்டமன்ற தொகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களின் 17 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று, பயன்பாட்டிற்கு வராமல் இருந்த சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு போக்குவரத்து துறை அமைச்ச…