உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தீபாவளி நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை..!

சென்னை வியாசர்பாடியில், தீபாவளி நள்ளிரவில் முன்விரோதம் காரணமாக தனுஷ் (19) என்ற ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சித்தியுடன் தகாத உறவு வைத்திருந்த பொய்யாது என்பவரை தனுஷ் தட்டிக்கேட்டதோடு, தனது சகோதரரைப் பொய்யாதுவின் மகன் அப்புக்குட்டி தாக்கியது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் இப்படுகொலை நிகழ்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இச்சம்பவத்தில் தப்பியோடிய அப்புக்குட்டி, அவரது தந்தை பொய்யாது உட்பட 6 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.