Indian Express Tamil
உயிரியலுக்கு 11, கணிதத்திற்கு 3; ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை நாட்கள் லீவ்? சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை இங்கே
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-27 கல்வி ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பாட வாரியான கால அட்டவணையைத் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in-இல் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் சி.பி.எஸ்.இ வாரியம் வெளியிட்டுள்ள கால அட்டவணையின்படி, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16 அன்று இயற்பியல் (Physics) பாடத்துடன் தொடங்கி, ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ளன. சட்ட ஆய்வுகள் (Legal Studies) பாடத்திற்கான தேர்வு கடைசி நாளில் நடைபெற உள்ளது. நவம்பர் 6 தேதியிட்ட அறிவிப்பின்படி, அனைத்துத் தேர்வுகளும் காலை 10:30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 வரை நடைபெறும…