Nakkheeran
”கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் பேச்சு மோசடியானது” - வைகோ காட்டம்!
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார். இது குறித்து அவர் பேசுகையில், “நாட்டின் சட்டத்தைப் பற்றி தமிழக முதல்வர் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு, தனது சொந்த இடத்தில் அணையைக் கட்டுவதற்கு உச்ச நீத…