Indian Express Tamil
பெரியார் அறிவுலக விவகாரம்: ஐகோர்ட் கண்காணிப்பில் விசாரணை ஆணையம் கோரி எழுத்தாளர்கள் கூட்டறிக்கை
கோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைத்தன்மையும் அறிவுப் பெறுமதியும் இல்லாத போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதற்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ள எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள், இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூட்டறிக்கை வாயிலாகத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர். இந்தக் கூட்டறிக்கையை ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், எழுத்தாளரும் ஆய்வாளருமான எஸ்.வி.ராஜதுரை, ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் லெ.ஜவகர் நேசன், பேராசிரியர் வீ.அரசு உள்ளிடோர் வெளியிட்டு…