Indian Express Tamil
அதிகாலை 3.50 மணிக்கு சென்னை டூ கிரீஸ்.. அனிருத் திருமணத்தில் பங்கேற்கும் ஸ்டாலின், உதயநிதி
தமிழக முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை இருவரும் விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். துபாய் வழியாக கிரீஸ் நாட்டுக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்குப் புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருவரும் பயணம் செய்துள்ளனர். துபாயில் விமானம் மாறி, அங்கிருந்து கிரீஸ் நாட்டைச் சென்றடைய உள்ளதாகக் கூறப்படு…