Nakkheeran
’சிறப்புத் துணை ஆய்வாளரின் குடும்பத்திற்கு நிவாரணம்’; முதல்வர் விஜய் உத்தரவு
போதை கும்பலால் தாக்கப்பட்டு உயிர் இழந்த சிறப்புத் துணை ஆய்வாளருக்கு நிவாரண உதவி வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், அல்லிநகரம் சமதர்மபுரத்தில், தீபாவளி பண்டிகை நாளன்று (08-11-26) பணி முடிந்து சீருடையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், பொதுமக்களுக்கு இடையூறாக நடுரோட்டில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த மதுபோதை கும்பலைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந…