Indian Express Tamil
TNPSC group 4 exam syllabus: டாப் டாபிக்ஸ் இவைதான்; இந்த ஒரு டாபிக்கில் எத்தனை மார்க் தெரியுமா?
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், பாடத்திட்டத்தில் எந்த தலைப்புக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனகாப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 6574 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 8 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தக் குரூப் 4 தேர்வில் பெரும்பாலான பதவிகளுக்கான அடிப்படை தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் பட்டப்ப…